• Increase font size
  • Default font size
  • Decrease font size

2013-06-13 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
கறுவா ஏற்றுமதி
இலங்கை ஆண்டொன்றில் 13,000 மெற்றிக் தொன் கறுவாவை ஏற்றுமதி செய்கின்றது. தரம் குறைந்த கறுவா ஏற்றுமதியைத் தடுப்பதற்கும் நாட்டில் கறுவா உற்பத்தியை மேம்படுத்துவதற்கும் கறுவாச் செய்கையில் ஈடுபட்டுள்ள 350,000 குடும்பங்களுக்கு மேலான ஆட்களினது தொழிலை நிலைபேறுடையதாக்குவதற்கும் கறுவா ஏற்றுமதியில் இலங்கையின் தர நியமங்களுக்கு அமைவாக செயலாற்றுவதை கட்டாயமாக்குவதற்கும் 2013‑06‑05 ஆம் திகதியிடப்பட்டதும் 1813/15 ஆம்இலக்கத்தைக் கொண்டதுமான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலை அங்கீகாரத்தின் பொருட்டு பாராளுமன்னறத்தில் சமர்ப்பிக்கும் பொருட்டு சர்வதேச நாணய ஒத்துழைப்பு பற்றிய (சிரேட்ட) அமைச்சர் மாண்புமிகு (கலாநிதி) சரத் அமுனுகம அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.