• Increase font size
  • Default font size
  • Decrease font size

2013-06-13 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
அரசாங்க கொள்கை கட்டமைப்பிற்குள் உள்ளூர் கைத்தொழில்களை ஊக்குவித்தல்
உள்நாட்டு முதலீட்டாளர்களின் உரிமைகளை பாதுகாத்து, நேரடியான வெளிநாட்டு முதலீடுகளை பயன்படுத்த வேண்டிய முன்னுரிமைத் துறைகளை அறிந்துகொள்ளும் தேவை அமைச்சரவையினால் இனங் காணப்பட்டது. ஏற்றுமதியினை நோக்காகக் கொண்டு, சரக்குப் பொருட்களை பதனிடல், பெறுமதிசேர்த்தல், விலங்கு கட்டுப்பாடு, கோழி வளர்ப்பு போன்ற துறைகள் வெளிநாட்டு முதலீடுகள் பயன்படுத்தப்பட வேண்டிய துறைகள் என தீர்மானிக்கப்பட்டது. ஏற்றுமதி சந்தைக்காக வாகனங்களைப் பொருத்துதல், பெற்றோலிய உற்பத்திகளின் சுத்திகரிப்பு, படகு உற்பத்தி போன்ற துறைகளிலும் முதலீடுகளை ஊக்குவிக்க வேண்டுமெனவும் உள்நாட்டு முதலீட்டாளர்களை பாதுகாக்கும் பொருட்டு சிறிய அளவிலான கமத்தொழில், சில்லறை வர்த்தகம், உருக்கு மற்றும் சீமெந்து உற்பத்தி, அழகுக்கலை மற்றும் அதுசார்ந்த உற்பத்திகள் போன்ற துறைகளில் வெளிநாட்டு முதலீடுகளை ஊக்குவிக்காமல் இருப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டது. இது சம்பந்தமாக ஏற்கனவே நடைமுறையிலுள்ள ஒழுங்குவிதிகளை மீளாய்வுசெய்து அமைச்சரவைக்கு பிரேரிப்புகளை சமர்ப்பிக்கும் பொருட்டு சர்வதேச நாணய ஒத்துழைப்பு பற்றிய (சிரேட்ட) அமைச்சர் மாண்புமிகு (கலாநிதி) சரத் அமுனுகம அவர்களின் தலைமைத்துவத்தின் கீழ் ஏனைய அமைச்சர்களையும் கொண்ட அமைச்சர் குழுவொன்று நியமிக்கப்பட்டது.