• Increase font size
  • Default font size
  • Decrease font size

2013-06-13 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
சேர் ஜோன் கொத்தலாவெல பாதுகாப்புப் பல்கலைக்கழகத்தில் நிருமாணிப்பதற்கு பிரேரிக்கப்பட்டுள்ள போதனாவைத்தியசாலை
இராணுவ மருத்துவசாலைகளில் நிலவும் பயிற்றப்பட்ட மருத்துவ உத்தியோகத்தர்களின் பற்றாக்குறைக்கு மாற்று நடவடிக்கைகளை செய்யும் நோக்குடன் இந்த பாதுகாப்பு பல்கலைக்கழகத்தினால் மருத்துவ பட்டப்படிப்பு பாடநெறியொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதோடு, 2013 ஆகஸ்ட் மாதத்தில் பயிற்சிநிலை நியமனங்களை பெறும் மருத்துவ மாணவர்களை பயிற்றுவிப்பதற்கு பிரேரிக்கப்பட்டுள்ள போதனாவைத்தியசாலையின் நிருமாணிப்பு வேலைகள் துரிதப்படுத்தப்பட வேண்டியுள்ளன. இந்த நோக்கத்தி்ற்காக அரசாங்க வங்கியொன்றிடமிருந்து 201,629,00 ஐ.அ.டொலர்களை (அண்ணளவாக 26 மில்லியன் ரூபா) கடனாகப் பெற்றுக்கொள்ளும் பொருட்டு பாதுகாப்பு, நகர அபிவிருத்தி அமைச்சராக அதிமேதகைய சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.