• Increase font size
  • Default font size
  • Decrease font size

2013-06-13 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
மஹிந்தோதய தொழினுட்ப ஆய்வு கூடத்துடனான தெரிவுசெய்யப்பட்ட 200 இடைநிலைப் பாடசாலைகளில் க.பொ.த (உ/த) பரீட்சை சார்பில் புதிய தொழினுட்ப பாட விதானத்தை ஆரம்பித்தலும் இதற்குத் தேவையான மனித வளங்களை வழங்குதலும்
தேசிய கல்வி ஆணைக்குழு, உயர் கல்வி அமைச்சு, இளைஞர் அலுவல்கள் மற்றும் திறன்கள் அபிவிருத்தி அமைச்சு, பல்கலைக்கழகங்கள் மானிய ஆணைக்குழு ஆகிய நிறுவனங்களின் உடன்பாட்டின் மீது மஹிந்தோதய தொழினுட்ப ஆய்வு கூட வசதிகள் வழங்கப்பட்டுள்ள, தெரிவு செய்யப்பட்ட 200 இடைநிலைப் பாடசாலைகளில் புதிய தொழினுட்ப பாட விதானத்தை அறிமுகப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தேர்தல் பிரிவொன்றில் ஆகக் குறைந்தது ஒரு பாடசாலை உரியதாகும் விதத்தில் பாடசாலைகள் தெரிவுசெய்யப்பட்டுள்ளன. இது சம்பந்தமான தொடர் நடவடிக்கைகளை எடுக்கும் பொருட்டு இளைஞர் அலுவல்கள் மற்றும் திறன்கள் அபிவிருத்தி அமைச்சர் மாண்புமிகு டலஸ் அழகப்பெரும அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.