• Increase font size
  • Default font size
  • Decrease font size

2013-06-13 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலங்கையின் தொழில்நுட்ப, ஆராய்ச்சி, அணுசக்தி அமைச்சு தாய்லாந்தின் விஞ்ஞான தொழினுட்ப அமைச்சுடன் செய்து கொள்ளவுள்ள விஞ்ஞான தொழினுட்ப ஒத்துழைப்பு மீதான புரிந்துணர்வு ஒப்பந்தம்
இருநாட்டினதும் தேசிய பொருளாதார அபிவிருத்திக்கான விஞ்ஞான, தொழினுட்ப துறைகளின் முக்கியத்துவம் மற்றும் விஞ்ஞான, தொழினுட்ப மேம்பாட்டிற்காக பங்களிப்பு நல்கையில் இருநாடுகளினதும் பொதுத் தேவைகளை நிறைவு செய்யும் பொருட்டு இருநாடுகளுக்கிடையில் செய்து கொள்ளப்பட வேண்டிய ஒத்துழைப்பு பெறுமதி இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. மேற்போந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவதற்காக தொழினுட்ப, ஆராய்ச்சி, அணுசக்தி அமைச்சர் மாண்புமிகு பாட்டலி சம்பிக்க றணவக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.