• Increase font size
  • Default font size
  • Decrease font size

2013-06-13 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
2013 பொதுநலவாய நாடுகளின் தலைவர்களின் கூட்டத்தை இலங்கையில் நடாத்துதல் (CHOGM)
1976 ஆம் ஆண்டில் இலங்கை ஐந்தாவது அணிசேரா நாடுகளின் மாநாட்டை நடாத்துவதற்கு உபசரணை வழங்கியதன் பின்னர் இலங்கையில் நடாத்தப்படும் பெரிய சருவதேச மாநாடு இதுவாகும். இந்த கூட்டத்தில் இலங்கையில் நடாத்துதல் சம்பந்தமாக முன் ஆயத்த நடவடிக்கைகள் பல ஏற்கனவே நிறைவேற்றப்பட்டு வருகின்றதோடு, அமைச்சர்கள் மட்டத்தில் கொள்கைத் தீர்மானங்களை எடுப்பதற்காக பின்வரும் குழுக்களை நியமிப்பதற்காக வெளிவிவகார அமைச்சர் மாண்புமிகு (பேராசிரியர்) ஜீ.எல்.பீரிஸ் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. * பொருளாதார அபிவிருத்தி அமைச்ராகிய மாண்புமிகு பசில் ராஜபக்ஷ அவர்களின் தலைமைத்துவத்தின் கீழ் பொதுநலவாய நாடுகளின் வர்த்தக ..................... பற்றிய குழு * இளைஞர் அலுவல்கள் மற்றும் திறன்கள் அபிவிருத்தி அமைச்சராகிய மாண்புமிகு டலஸ் அழகப்பெரும அவர்களின் தலைமைத்துவத்தின் கீழ் பொதுநலவாய நாடுகளின் இளைஞர் ..................... பற்றிய குழு * ஊடகத்துறை, தகவல் அமைச்சராகிய மாண்புமிகு கெஹெலிய ரம்புக்வெல்ல அவர்களின் தலைமைத்துவத்தின் கீழ் பொதுநலவாய நாடுகளின் ஊடக மற்றும் மக்கள் தொடர்பாடல் பற்றிய குழு