• Increase font size
  • Default font size
  • Decrease font size

2013-06-13 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
பேஸ்லைன் வீதி அபிவிருத்தி கருத்திட்டத்தின் கீழ் இடம் பெயர்ந்தவர்கள் குடியமர்த்தப்பட்டுள்ள கிருளப்பன டி.எம். கொலம்பகே மாவத்தையில் உள்ள காணியை வீதி அபிவிருத்தி அதிகாரசபைக்கு குறித்தொதுக்குதல்
பேஸ்லைன் வீதி அபிவிருத்தி கருத்திட்டத்தின் கீழ் இடம் பெயர்ந்தவர்களை குடியமர்த்துவதற்காக வீதி அபிவிருத்தி அதிகாரசபையினால் நகர அபிவிருத்தி அதிகாரசபைக்குச் சொந்தமான சுமார் 03 ஏக்கர் விஸ்தீரணமுடைய காணித்துண்டொன்றை மாத்திரம் பயன்படுத்தப்பட்டுள்ளது. பேஸ்லைன் வீதி அபிவிருத்தி கருத்திட்டத்தின் கீழ் காணிகள் இல்லாமற்போன தரப்பினர்களுக்கு உறுதிகளை வழங்கும் பொருட்டு சொல்லப்பட்ட இந்த காணியை வீதி அபிவிருத்தி அதிகாரசபைக்கு ........... அடிப்படையில் வழங்குவதற்காக பாதுகாப்பு, நகர அபிவிருத்தி அமைச்சராக அதிமேதகைய சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.