• Increase font size
  • Default font size
  • Decrease font size

2013-05-21 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
யப்பான் மனிதவள அபிவிருத்தி புலமைப்பரிசில் நிகழ்ச்சித் திட்டம் - 2013

இந்த நிகழ்ச்சித் திட்டத்தை 2013 ஆம் ஆண்டில் நடைமுறைப்படுத்தும் பொருட்டு யப்பான் அரசாங்கத்தினால் 192 மில்லியன் யப்பான் யென்களை (அண்ணளவாக 245 மில்லியன் ரூபா) உதவித் தொகையாக இலங்கைக்கு வழங்குவதற்கு ஒத்துக்கொண்டுள்ளது. இலங்கையின் சமூக, பொருளாதார அபிவிருத்தியின்பால் பயனுள்ள வகையில் பங்களிப்பினை வழங்குவதற்கு அரசாங்க உத்தியோகத்தர்களுக்கு இயலச் செய்யும் விதத்தில், அங்கீகரிக்கப்பட்ட யப்பான் கல்கலைக்கழகங்களில் உயர்கல்வி நிகழ்ச்சித் திட்டங்களில் கலந்து கொள்வதற்கு அரசாங்க உத்தியோகத்தர்களுக்கு சந்தர்ப்பங்கள் வழங்கப்படுவதன் மூலம் மனிதவள அபிவிருத்தியின் பொருட்டு ஒத்துழைப்பு நல்குவது இந்த நிகழ்ச்சித்திட்டத்தின் நோக்கமாகும். இயைபுள்ள நோக்கத்திற்காக சருவதேச ஒத்துழைப்பிற்கான யப்பான் முகவராண்மையுடன் நன்கொடை உடன்படிக்கை யொன்றைச் செய்து கொள்வதற்கு நிதி, திட்டமிடல் அமைச்சராக அதிமேதகைய சனாதிபதியினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.