• Increase font size
  • Default font size
  • Decrease font size

2013-05-21 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
உடுபத்தாவ பிரதேச செயலகத்திற்கு புதிய இரண்டுமாடிக் கட்டமொன்றை நிருமாணித்தல்
இந்த பிரதேச செயலகம் 43 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளை கொண்டுள்ளதோடு, இதன் சனத்தொகை 13,859 ஆகும். இந்த பிரதேசத்தில் வசிக்கும் மக்களுக்கு மிகச் சிறந்த வசதிகளை வழங்கும் நோக்கில் 2014 ஆம் ஆண்டிற்கான நடுத்தவணைக்கால செலவுக் கட்டமைப்பின் கீழ் 23.37 மில்லியன் ரூபா செலவில் மேற்போந்த கருத்திட்டத்தின் தொடர் நடவடிக்கைகளைச் செய்யும் பொருட்டு பொதுநிருவாக, உள்நாட்டலுவல்கள் அமைச்சர் மாண்புமிகு டபிள்யு.டீ.ஜே.செனெவிரத்ன அவர்களினால் சமர்ப் பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.