• Increase font size
  • Default font size
  • Decrease font size

2013-05-21 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
அம்பாந்தோட்டையில் மாவட்ட செயலாளருக்கான புதிய உத்தியோகபூர்வ இல்லத்தின் (இரண்டுமாடி) நிருமாணிப்பு
அம்பாந்தோட்டை மாவட்டம் 12 பிரதேச செயலாளர் பிரிவுகளையும் 576 கிராம உத்தியோகத்தர்கள் பிரிவுகளையும் கொண்டுள்ளதோடு, இந்த மாவட்டத்தின் மொத்த சனத்தொகை 596,617 ஆகும். 2013 ஆம் ஆண்டிற்காக குறித்தொதுக்கப்பட்டுள்ள வரவு செலவுத் திட்ட நிதி ஏற்பாடுகளின் மூலம் கருத்திட்டத்திற்கான செலவின் ஒரு பகுதியை ஈடுசெய்து கொள்ள முடியுமாயின், மேற்போந்த கருத்திட்டத்தை ஆரம்பித்து நடாத்திச் செல்வதற்கும் அவ்வாறு செய்ய முடியாதாயின், இந்த நோக்கத்திற்காக 2014 ஆம் ஆண்டிற்கான வரவுசெலவுத் திட்டத்தில் நிதியேற்பாடுகளை குறித்தொதுக்கிக் கொள்வதற்கும் பொதுநிருவாக, உள்நாட்டலுவல்கள் அமைச்சர் மாண்புமிகு டபிள்யு.டீ.ஜே.செனெவிரத்ன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.