• Increase font size
  • Default font size
  • Decrease font size

2013-05-21 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
ஹூளந்தாவ இடது கஹம்பான வீதிப் புனரமைப்பும் அபிவிருத்தியும் (UVMMC803) - உலக வங்கியினால் நிதயளிக்கப்படும் மாகாண வீதிக் கருத்திட்டம்
உலக வங்கியினால் ஊவா, கிழக்கு மற்றும் வடக்கு மாகாணங்களின் வீதி புனரமைப்பு மற்றும் அபிவிருத்திக்காக 105 ஐ.அ.டொலர்கள் குறித்தொதுக்கப்பட்டுள்ளது. அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட கொள்வனவுக் குழுவினால் சிபாரிசு செய்யப்பட்டுள்ளவாறு, இந்த கடன் தொகையிலிருந்து ஒரு பகுதி ஹூளந்தாவ இடது கஹம்பான வீதிப் புனரமைப்புக்கும் அபிவிருத்தி செய்வதற்குமாக பயன்படுத்தும் பொருட்டு உள்ளூராட்சி, மாகாண சபைகள் அமைச்சர் மாண்புமிகு ஏ.எல்.எம்.அதாவுல்லா அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.