• Increase font size
  • Default font size
  • Decrease font size

2013-05-21 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
உலக வங்கியினால் நிதியளிக்கப்படும் வீதி பிரிவு உதவிக் கருத்திட்டம்
பின்வரும் வீதிப் பகுதிகளுக்குரிய புனரமைப்பு மற்றும் அபிவிருத்தி பணிகளை செய்யும் பொருட்டு துறைமுகங்கள், நெடுஞ்சாலைகள் அமைச்சராக அதிமேதகைய சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. * பேலியகொட தொடக்கம் மஹாபாகே (0.6 கி.மீ. தொடக்கம் கி.மீ. 9.0 வரை) ; அத்துடன் * மஹாபாகே தொடக்கம் ஜாஎல வரை (9.0 கி.மீ.தொடக்கம் 18.31கி.மீ.வரை) பேலியகொட - புத்தளம் பாதை (A3); * கொழும்பு - காலி பாதை (A2) மெலிபன் சந்தி தொடக்கம் குருச சந்தி வரை (13.275 கி.மீ. தொடக்கம் 18.480 கி.மீ.வரை) மற்றும் குருச சந்தி தொடக்கம் பாணந்துறை பாலம் வரை (0 கி.மீ.தொடக்கம் 0.080 கி.மீ.வரை) (AB011) ; அத்துடன் * கொழும்பு - காலி பாதை (A2) பாணந்துறை பாலம் தொடக்கம் தல்லுருவ சந்தி வரை (25.240 கி.மீ.தொடக்கம் 30.300 கி.மீ.வரை) மற்றும் குருச சந்தி பாணந்துறை பாலம் வரை (0.080 கி.மீ.தொடக்கம் 6,780 கி.மீ.வரை) - (AB011)