• Increase font size
  • Default font size
  • Decrease font size

2013-05-21 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
சேர் ஜோன் கொத்தலாவெல பாதுகாப்புப் பல்கலைக்கழகத்தின் பிரேரிக்கப்பட்ட போதனா வைத்தியசாலை
இந்த நாட்டின் இராணுவ மருத்துவ சேவையில் நிலவும் தேவைகளை ஈடுசெய்யும் பொருட்டு, சேர் ஜோன் கொத்தலாவெல பாதுகாப்புப் பல்கலைக்கழகத்தினால் மருத்துவ மாணவ இராணுவ வீரர்களுக்கு மருத்துவ பட்டம் வழங்கும் புதிய வேலைத் திட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதோடு, 2013 ஆகஸ்ட் மாதத்தில் பயிற்சி நிலை நியமனங்கள் வழங்கப்படும் மருத்துவ மாணவ இராணுவ வீரர்களை பயிற்றுவிப்பதற்காக இந்த பல்கலைக்கழகத்தின் பிரேரிக்கப்பட்ட போதனா வைத்தியசாலை மிகத் துரிதமாக ஆரம்பிக்கப்பட வேண்டியுள்ளது. இந்த வைத்தியசாலையின் ஊடாக வெளிநாட்டு நோயாளிகளுக்கும் கூட சேவைகளை வழங்குவதற்கு எதிர்பார்க்கப்படுவதோடு, இலங்கையைச் சேர்ந்த நோயாளிகள் பாரிய அளவில் வெளிநாட்டு பணங்களை செலவழித்து வெளிநாடுகளில் மேற்கொள்ளும் அதிநவீன மருத்துவ பரிசோதனைகளை இந்த நாட்டிலேயே செய்து கொள்வதற்கு வசதியளிப்பதற்கும் கூட எதிர்பார்க்கப்படுகின்றது. அவ்வாறே அங்கவீனமுற்ற இராணுவ வீரர்களுக்கு உயர் மட்டத்தி்லான பௌதீக சிகிச்சைகளை இந்த வைத்தியசாலை வழங்கவுள்ளது. அரசாங்க வங்கிககள் மூலம் வழங்கப்படும் நிதியைப் பயன்படுத்தி, 201.6 மில்லியன் ஐ.அ.டொலர்களைக் கொண்ட (அண்ணளவாக 26 பில்லியன் ரூபா) செலவில் இந்த கருத்திட்டத்திற்கு உரிய தொடர் நடவடிக்கைகளை எடுப்பதற்காக பாதுகாப்பு, நகர அபிவிருத்தி அமைச்சராக அதிமேதகைய சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.