• Increase font size
  • Default font size
  • Decrease font size

2013-05-21 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
2013 ஆம் ஆண்டின் பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் மாநாடு - ஊடகம் மற்றும் விளம்பரத்துக்கான உபகுழுவின் பணிகள்
2013 நவெம்பர் மாதம் இலங்கையில் நடாத்தப்படவுள்ள பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் மாநாட்டை ஒழுங்கு செய்வதற்கு நியமிக்கப்பட்டுள்ள செயலணியின் ஊடக மற்றும் விளம்பரத்துக்கான உபகுழுவிற்கு கையளிக்கப்பட்டுள்ள- * மாநாட்டுக்கான உத்தியோகபூர்வ இலச்சினையை அறிமுகப்படுத்து வதற்கும் மாநாட்டின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தை வடிவமைத்து பேணுதல்; * 1,200 உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு ஊடகவியலாளர்களுக்கு வசதிகளை வழங்கும் இந்த மாநாட்டின் உத்தியோகபூர்வ ஊடக நிலையமொன்றை நிருமாணிப்பதற்கும், பேணுதல்; அத்துடன் * தேசிய மற்றும் சருவதேச ரீதியில் இலங்கை தொடர்பான நற்பெயரை மேம்படுத்தி மக்களுக்கு விழிப்பூட்டுதல். ஆகிய நோக்கங்களை நிறைவேற்றுவதற்காக ஊடகத்துறை, தகவல் அமைச்சர் மாண்புமிகு கெஹெலிய ரம்புக்வெல்ல அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.