• Increase font size
  • Default font size
  • Decrease font size

2013-05-21 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
தெலம்புயாய வாழ்க்கைத் தொழிற்பயிற்சி நிலையத்தினை விரிவுபடுத்துதல்
அங்கவீனர்களுக்கான தொழிற்பயிற்சிகளை வழங்கும் ஐந்து (05) வாழ்க்கைத் தொழிற்பயிற்சி நிலையங்கள் உள்ளதோடு, அம்பாந்தோட்டை மாவட்டத்திலுள்ள தௌம்புயாய வாழ்க்கைத் தொழிற்பயிற்சி நிலையம் இதில் ஒன்றாகும். இந்த நிறுவனத்தின் மூலம் கமத்தொழில், தையல், பேக்கரி உற்பத்திகள், இலத்திரனியல் மற்றும் தச்சுத்தொழில் போன்ற துறைகளில் இரண்டு (02) வருட கால பாடநெறிகள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. பின்வரும் நிருமாணிப்புகளுக்கு உரியதாக மேற்போந்த ஒப்பந்தத்தை, நிருமாண, பொறியியல்சேவைகள், வீடமைப்பு, பொது வசதிகள் அமைச்சின் தொழினுட்ப குழுவினால் அங்கீகரிக்கப்படுவதற்கு உட்பட்டு, 174,820,800.00 ரூபாவைக் கொண்ட செலவில் மத்திய பொறியில் உசாத்துணைப் பணியகத்திற்கு வழங்குவதற்காக சமூக சேவைகள் அமைச்சர் மாண்புமிகு பீலிக்ஸ் பெரேரா அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. * 100 ஆண் பயிலுநர்களுக்கான விடுதியொன்றின் நிருமாணிப்பு; * 100 பெண் பயிலுநர்களுக்கான விடுதியொன்றின் நிருமாணிப்பு; அத்துடன் * சமையலறை, 300 பயிலுநர்களுக்கான சாப்பாட்டு அறையொன்றின் நிருமாணிப்பு.