• Increase font size
  • Default font size
  • Decrease font size

2013-05-21 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
பாடசாலை சீருடைகளுக்கான உள்நாட்டு உற்பத்தியாளர்கள் பற்றிய அறிக்கை
பாடசாலை சீருடைகளாக விநியோகிக்கும் பொருட்டு வருடாந்தம் தேவைப்படும் சீருடைத் துணியின் அளவு 11.7 மில்லியன் மீற்றர்களாகும். 2014 ஆம் ஆண்டிற்குத் தேவையான பாடசாலை சீருடைத் துணிகளின் 80 சதவீதத்தை உள்நாட்டு உற்பத்தியாளர்களுக்கு வழங்குவதற்கும் மீதி 20 சதவீதமான அளவை மூலப்பொருள் நிலையிலான துணிகளாக கொண்டுவந்து உள்நாட்டில் துணிகள் பதப்படுத்துபவர்களினால் இந்நாட்டில் தயாரிப்பதற்கும் அல்லது அவ்வாறு செய்வதற்கு இயலாமற் போகும் சந்தர்ப்பத்தில் மாத்திரம் இந்த 20 சத வீதத்தை இறக்குமதி செய்வதற்கும் இதற்காக நியமிக்கப்பட்ட அமைச்சர்களின் குழுவின் தலைவராக நல்லாட்சி மற்றும் உட்கட்டமைப்பு பற்றிய (சிரேட்ட) அமைச்சர் மாண்புமிகு ரத்னசிறி விக்ரமநாயக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. 2015 ஆம் ஆண்டிலிருந்து பாடசாலை சீருடை துணிகளின் மொத்தத்தேவை உள்நாட்டு உற்பத்தியாளர்களிடமிருந்து கொள்வனவு செய்யப்படுவதை உறுதிசெய்வதற்கு இயைபுள்ள அதிகாரபீடங்களினால் நடவடிக்கை எடுக்கப்படும்.