• Increase font size
  • Default font size
  • Decrease font size

2013-05-21 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலங்கையில் இரசாயன விபத்துகளை தவிர்ப்பதற்கும் முன் ஆயத்தமாவதற்குமான நிகழ்ச்சித் திட்டமொன்றைத் தயாரிப்பதற்கான கருத்திட்டம்
இலங்கையில் நடாத்தப்பட்ட கணிப்பீட்டுக்கமைய தற்பொழுது பாரிய, நடுத்தர மற்றும் சிறிய அளவிலான இரசாயன கைத்தொழில்கள் மற்றும் செயற்பாடுகள் அண்ணளவாக 1000 ம் மட்டில் தாபிக்கப்பட்டுள்ளன. இந்த இரசாயன கைத்தொழில்கள் மற்றும் அவற்றின் செயற்பாடுகள் மூலம் ஏற்படக்கூடிய திடீர் விபத்துகளை தவிர்ப்பதற்கு அல்லது கட்டுப்படுத்துவதற்கு முன் ஆயத்த செயற்பாடுகளை தயாரிப்பதற்குத் தேவையாகவுள்ளது. இத்தகைய நிகழ்ச்சித் திட்டங்களை நடைமுறைப்படுத்தும் பொருட்டு, ஐக்கிய நாடுகளின் சுற்றாடல் நிகழ்ச்சித் திட்டத்தின் மூலம் தாபிக்கப்பட்டுள்ள சருவதேச இரசாயன பொருட்கள் முகாமைத்துவம் தொடர்பிலான திறமுறை நுழைவுக்கான செயலகத்தின் மூலம் 224,834.00 ஐக்கிய அமெரிக்க டொலர்கள் கொண்ட தொகையொன்று கொடையாக வழங்குவதற்கு விருப்பம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பிலான தொடர் நடவடிக்கைகளை எடுப்பதற்காக சுற்றாடல், மீள் புதுப்பித்தல் சக்தி அமைச்சர் மாண்புமிகு சுசில் பிரேமஜயந்த அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.