• Increase font size
  • Default font size
  • Decrease font size

2013-05-21 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
உயர் ரக கறவைப் பசுக்களை பெருக்குவதற்கான நிகழ்ச்சித் திட்டம்
இந்தக் கருத்திட்டம் 2008 ஆம் ஆண்டிலிருந்து 2015 ஆம் ஆண்டு வரையிலான காலப் பகுதிக்குள் 1,442.00 மில்லியன் ரூபாவைக் கொண்ட மொத்த செலவில் நடை முறைப்படுத்தும் பொருட்டு தயாரிக்கப்பட்டதோடு, இந்த நோக்கத்திற்காக 2008 ஆம் ஆண்டிற்காக 93.0 மில்லியன் ரூபாவும் 2009 ஆம் ஆண்டிலிருந்து 2015 ஆம் ஆண்டு வரையிலான மீதி ஏழு வருட காலப்பகுதிக்கு 1,349.0 மில்லியன் ரூபாவும் என்ற வகையில் நிதி குறித்தொதுக்கப்பட்டுள்ளது. விலங்கு உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களத்தின் மூலம் நடைமுறைப்படுத்தப்படும் செயற்கை முறையிலான கருக்கட்டல் நிகழ்ச்சித் திட்டத்தின் மூலம் ஈணப்படும் பசுக் கன்றுகளை உயர்தரத்திலான பசுக்களாக மாற்றுவது இந்த நிகழ்ச்சித் திட்டத்தின் நோக்கமாகும். இந்தக் கருத்திட்டத்தின் 2013 ஆம் ஆண்டிலிருந்து 2015 ஆம் ஆண்டு வரையிலான மீதி காலப்பகுதிக்குள் பாற்பண்ணையாளர்களுக்கு கால்நடைகளுக்கான உணவுகளை வழங்குவதற்குப் பதிலாக 300 மில்லியன் ரூபாவை பயன்படுத்தி இயைபுள்ள நியதிகளுக்கு உட்பட்டு, நிதிசார் ஊக்குவிப் பொன்றை வழங்குவதற்கு கால்நடைவளர்ப்பு, கிராமிய சமூக அபிவிருத்தி அமைச்சர் மாண்புமிகு ஆறுமுகன் தொண்டமான் அவர்களினால் சமர்ப்பிக்கப் பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.