• Increase font size
  • Default font size
  • Decrease font size

2013-05-21 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
சேர் ஜோன் கொத்தலாவெல பாதுகாப்புப் பல்கலைக்கழகத்தினால் வழங்கப் படுகின்ற மருத்துவ பட்டம் (M.B.B.S) மற்றும் அறுவைச் சிகிச்சை மருத்துவப் பட்டம் (M.B.B.S on Surgery) இலங்கை மருத்துவச் சபையினால் ஏற்றுக் கொள்ளப்பட்டதும் அங்கீகரிக்கப்பட்டதுமான மருத்துவப் பட்டங்களாக ஏற்றுக் கொள்ளல்
2014 ஆம் ஆண்டில் சேர் ஜோன் கொத்தலாவெல பாதுகாப்புப் பல்கலைக்கழகத்திலிருந்து வெளியேறும் முதலாவது பயிலிளவல் உத்தியோகத்தர்கள் குழுவுக்கு இந்த பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்தின் மூலம் மருத்துவப் பட்டமும் (M.B.B.S) மற்றும் அறுவைச் சிகிச்சை மருத்துவப் பட்டமும் (M.B.B.S on Surgery) வழங்கப்படவுள்ளன. இந்த பயிலிளவல் உத்தியோகத்தர்களுக்கு இலங்கையில் மருத்துவ அல்லது அறுவைச் சிகிச்சை மருத்துவத்தில் ஈடுபடுவதற்கு இயலச் செய்யும் விதத்தில் அவர்களைப் பதிவு செய்வதற்கு இலங்கை மருத்துவ சபைக்கு இயலுமாகும் விதத்தில் மருத்துவக் கட்டளைச் சட்டத்தின் கீழ் அதற்கான ஏற்பாடுகளைச் செய்வதற்கு சுகாதார அமைச்சர் மாண்புமிகு மைத்திரிபால சிறிசேன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.