• Increase font size
  • Default font size
  • Decrease font size

2013-05-09 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
வாக்காளர்களைப் பதிவு செய்யும் (விசேட ஏற்பாடுகள்) சட்டமூலம்
இலங்கையில் வேறு பிரதேசங்களில் தற்காலிகமாக வசிக்கும் வடமாகாணத்தில் இருந்து இடம்பெயர்ந்தோரை அவர்களுடைய நிரந்தர வதிவினை எண்பிக்கும் பொருட்டு விதித்துரைக்கப்பட்டுள்ள விடயங்கள் யாவும் திருப்திகரமாக பூர்த்தி செய்திருப்பதன் மீது வாக்காளர்களாக பதிவு செய்து கொள்வதற்கு இயலுமாகும் விதத்தில் சட்டங்களை ஆக்குவதற்கு சட்டவரைநருக்கு பணிப்புவிடுப்பதற்காக நீதி அமைச்சர் மாண்புமிகு ரவூப் ஹக்கீம் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.