• Increase font size
  • Default font size
  • Decrease font size

2013-05-09 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
வவுனியா பீடத்தின் பம்பைமடுவில் முன்வார்ப்பு இரண்டு (02) மாடி விரிவுரை மண்டபத்தின் நிருமாணிப்பு - யாழ்ப்பாணம் பல்கலைக்கழகம்
பல்கலைக்கழகங்களுக்கு உள்வாங்கும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டதன் காரணமாக மேலதிக இடவசதிகளை ஏற்பாடு செய்யும் பொருட்டு 59.3 மில்லியன் ரூபாவைக் கொண்ட மொத்த செலவில் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் முன்வார்ப்பு இரண்டு (02) மாடி விரிவுரை மண்டபத்தின் நிருமாணிப்புக்கும் இந்தக் கருத்திட்டத்தை 2013 ஆம் ஆண்டில் ஆரம்பித்து ஆறு (06) மாத காலத்திற்குள் பூர்த்தி செய்வதற்கும் உயர்கல்வி அமைச்சர் மாண்புமிகு எஸ்.பீ.திசாநாயக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.