• Increase font size
  • Default font size
  • Decrease font size

2013-05-09 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
பெல்ஜியம் கடன் உதவியின் கீழ் மொனராகலை - புத்தள நீர் வழங்கல் கருத்திட்டத்தை செயற்படுத்துதல்
இந்த பிரேரிக்கப்பட்ட நீர் வழங்கல் திட்டத்தின் மூலம் புத்தள மற்றும் மொனராகலை பிரதேசங்களில் வசிக்கும் சுமார் 50,000 நுகர்வோர்களுக்கு குழாய் நீர் வசதிகள் வழங்கப்படுவதோடு, இதன் மூலம் பிரதேசத்தில் உள்ள வர்த்தக மற்றும் கைத்தொழில் துறைகளும் தழுவப்படும். மேற்போந்த ஒப்பந்தத்தை வழங்குவதற்கும் இந்த நோக்கத்திற்கு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிதியங்களை ஏற்பாடு செய்து கொள்வதற்கு வெளிநாட்டு வளங்கள் திணைக்களத்திற்கு அறிவிப்பதற்கும் நீர் வழங்கல், வடிகாலமைப்பு அமைச்சர் மாண்புமிகு தினேஷ் குணவர்த்தன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.