• Increase font size
  • Default font size
  • Decrease font size

2013-05-09 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
அவுஸ்திரேலிய நிதியுதவியின் மீது இலங்கைக்குத் தேவையான மருத் துவமனை சிகிச்சைக் கழிவு முகாமைத்துவ முறைமைகளை தாபிப்பதற்கான கருத்திட்டம்
சிகிச்சைக் கழிவுப் பொருட்களை அப்புறப்படுத்தும் முறையான திட்டமொன்றைத் தாபிக்கும் தேவை கவனத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டு, இதற்காக முழுமையான தீர்வொன்றை ஏற்பாடு செய்யும் பொருட்டு சுகாதார அமைச்சினால் முன்னுரிமை நோக்கமொன்றாகக் கண்டறியப்பட்டுள்ள இந்தக் கருத்திட்டம், அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவினால் சிபாரிசு செய்யப்பட்டுள்ளவாறு இதற்குரியதான தொடர் நடவடிக்கைகளை எடுப்பதற்காக சுகாதார அமைச்சர் மாண்புமிகு மைத்திரிபால சிறிசேன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.