• Increase font size
  • Default font size
  • Decrease font size

2013-05-09 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
தெற்கு போக்குவரத்து அபிவிருத்திக் கருத்திட்டம் - எரிபொருள் நிரப்பகங்களை தாபிப்பதற்காக இளைப்பாறுகை மனையிடங்களில் உள்ள துண்டு இலக்கம் 01 மற்றும் துண்டு இலக்கம் 09 ஆகியவற்றை குத்தகைக்களித்தல்
போட்டிக் கேள்வியின் மீது தெரிவு செய்யப்பட்ட இரு தரப்பினர்களுக்கு எரிபொருள் நிரப்பகங்களைத் தாபிக்கும் பொருட்டு தெற்கு கடுகதிப் பாதையில் இளைப்பாறும் மனையிடங்களில் அமைந்துள்ள மேற்போந்த இரண்டு காணித் துண்டுகளை 30 வருட காலத்திற்கு குத்தகைக்களிக்கும் பொருட்டு துறைமுகங்கள், நெடுஞ்சாலைகள் அமைச்சராக அதிமேதகைய சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.