• Increase font size
  • Default font size
  • Decrease font size

2013-05-09 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
2014 ஆம் ஆண்டு சார்பில் இலவசமாக விநியோகிக்கப்படும் பாடசாலை பாடப்புத்தகங்களை அச்சிடுதல்
2014 ஆம் ஆண்டில் பாடசாலை மாணவர்களுக்கு இலவசமாக பாடப்புத்தகங்களை விநியோகிப்பதற்கு உரியதாக 758,385,350.00 ரூபாவைக் கொண்ட செலவில் 81 வகை பாடப்புத்தகங்கள் 8,546,100 பிரதிகளை அச்சிடும் பொருட்டு அரசாங்க அச்சகக் கூட்டுத்தாபனத்திற்கும் 63,980,520.00 ரூபாவைக் கொண்ட செலவில் 05 வகை பாடப்புத்தகங்கள் 1,030,000 பிரதிகளை அச்சிடும் பொருட்டு அரசாங்க அச்சகத் திணைக்கத்திற்குக் கையளிப்பதற்காக கல்வி அமைச்சர் மாண்புமிகு பந்துல குணவர்த்தன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.