• Increase font size
  • Default font size
  • Decrease font size

2013-05-09 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
நுளம்புகள் பரவும் இடங்களை அழிப்பதன் மூலம் டெங்கு நோய் கட்டுப்பாட்டில் பிரிவுகளுக்கிடையேயான பங்களிப்பினை பலப்படுத்துதல்

டெங்கு நோய் பரவுவதை தடுக்கும் பொருட்டு முக்கியமாக பின்வரும் விடயங்கள் பற்றி அமைச்சினால் எடுக்கப்படும் நடவடிக்கைகளைப் பலப்படுத்தும் தேவை சம்பந்தமாக சுகாதார அமைச்சர் மாண்புமிகு மைத்திரிபால சிறிசேன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்பு அமைச்சரவையினால் அங்கீகரிக்கப்பட்டது: பாதுகாப்பு, நகர அபிவிருத்தி அமைச்சு * மாவட்ட மற்றும் பிரதேச மட்டத்தில் கிரமமாக நடாத்தப்படும் பிரிவுகளுக்கிடையேயான கூட்டங்களுக்கு பொலிஸ் திணைக்களத்தின் உத்தியோகத்தர்கள் கலந்து கொள்ளல்; அத்துடன் * அவதானம் மிக்க கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் மேற்கொள்ளப்படுகின்ற சுத்திகரிப்பு நடவடிக்கைகளின் போது சுகாதார மற்றும் ஏனைய உத்தியோகத்தர்களுக்கு ஒத்தாசை நல்குதல். சுகாதார அமைச்சு * ஏனைய பிரிவுகளை கூட்டிணைத்தலும் வசதிகளை ஏற்பாடு செய்தலும்; * முன்னதாகவே நோய்களை நிர்ணயித்தலும் நோய் பரவுவதைக் கட்டுப்படுத்துதலும்; அத்துடன் * ஏனைய பிரிவுகளுடன் இணைந்து செயற்படும் கிராமிய குழுக்களைத் தாபித்தல். சுற்றாடல், மீள் புதுப்பித்தல் சக்தி அமைச்சு * சகல உள்ளூராட்சி அதிகார பிரதேசங்களுக்குள்ளும் கழிவு மீள்சுழற்சி திட்டமொன்றை அறிமுகப்படுத்துதல். உள்ளூராட்சி, மாகாண சபைகள் அமைச்சு (உள்ளூராட்சி நிறுவனங்களின் ஊடாக) * கழிவுகளை உரிய முறையில் அப்புறப்படுத்துதல்; அத்துடன் * உள்ளூராட்சி நிறுவன மட்டங்களில் டெங்கு மீளாய்வுக் கூட்டங்களை நடாத்துதல். பொதுநிருவாக, உள்நாட்டலுவல்கள் அமைச்சு (மாவட்ட, பிரதேச செயலாளர்கள் ஊடாக) * சகல கிராம உத்தியோகத்தர் பிரிவுகளிலும் நுளம்பு பரவுவதை தடுக்கும் குழுக்களைத் தாபித்தல்; அத்துடன் * மாவட்ட மற்றும் பிரதேச மட்டத்தில் பிரிவுகளுக்கு இடையிலான கூட்டங்களை கிரமமாக நடாத்துதல் கல்வி அமைச்சு * பாடசாலை மனையிடங்களை தொடர்ச்சியாக சுத்திகரித்தல்.