• Increase font size
  • Default font size
  • Decrease font size

2024-04-25 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை (அடுத்த கூட்டத்தில் உறுதிப்படுத்திக் கொள்ளுவதற்கு உட்பட்டு)
2023 ஆம் ஆண்டிற்கான இலங்கை மத்திய வங்கியின் வருடாந்த பொருளாதார மீளாய்வையும் இலங்கை மத்திய வங்கியின் நிதிக்கூற்று மற்றும் தொழிற்பாட்டு நடவடிக்கைகளையும் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தல்
- 2023 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க இலங்கை மத்திய வங்கி சட்டத்தின் 80(3) ஆம் பிரிவுக்கு அமைவாக ஒவ்வொரு நிதியாண்டும் முடிவடைந்து நான்கு மாத காலப்பகுதிக்குள் குறித்த நிதியாண்டில் நிலவிய பொருளாதார நிலைமை பற்றிய அறிக்கையினை நிதி என்னும் விடயத்திற்கு பொறுப்பான அமைச்சரினால் பாராளுமன்றத்திற்கு சமர்ப்பித்தல் வேண்டும். அதற்கு மேலதிகமாக இலங்கை மத்திய வங்கி சட்டத்தின் 99(3) ஆம் பிரிவுக்கு அமைவாக ஒவ்வொரு நிதியாண்டும் முடிவடைந்து நான்கு மாத காலப்பகுதிக்குள் மத்திய வங்கியின் ஆளுநரினாலும் பிரதான கணக்காளரினாலும் ஒப்பமிடப்பட்ட அத்துடன் கணக்காய்வாளர் அதிபதியினால் கணக்காய்வு செய்யப்பட்ட நிதிக்கூற்றும் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுதல் வேண்டும். அதற்கிணங்க 2023 ஆம் ஆண்டு சார்பில் இலங்கை மத்திய வங்கியினால் தயாரிக்கப்பட்டுள்ள வருடாந்த பொருளாதார மீளாய்வு மற்றும் இலங்கை மத்திய வங்கியின் நிதிக்கூற்று உட்பட தொழிற்பாட்டு நடவடிக்கைகளை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கும் பொருட்டு நிதி, பொருளாதார நிலைப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக மாண்புமிகு சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.