• Increase font size
  • Default font size
  • Decrease font size

2024-04-25 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை (அடுத்த கூட்டத்தில் உறுதிப்படுத்திக் கொள்ளுவதற்கு உட்பட்டு)
மத்தள ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையத்தின் முகாமைத்துவத்தை கையளித்தல்
- மத்தள ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையத்திலுள்ள வசதிகளை பயன்படுத்துவதற்கு ஆர்வமுள்ள தரப்பினர்களிடமிருந்து ஆர்வ வௌிப்படுத்தல்களை கோருவதற்கு 2023‑01‑09 ஆம் திகதியன்று நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதற்கிணங்க ஆர்வ வௌிப்படுத்தல்கள் கோரப்பட்டுள்ளதோடு, 05 நிறுவனங்கள் ஆர்வ வௌிப்படுத்தல்களை முன்வைத்துள்ளன. அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட இணக்கப் பேச்சுக் குழுவின் சிபாரிசின் பிரகாரம் மத்தள ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையத்தின் முகாமைத்துவத்தை இந்தியாவின் M/s Shaurya Aeronautics (Pvt) Ltd நிறுவனத்திற்கும் ரஷ்யாவின் Airports of Regions Management Company நிறுவனத்திற்கும் அல்லது அவற்றின் கூட்டு தொழில்முயற்சியொன்றுக்கு 30 வருட காலத்திற்கு கையளிக்கும் பொருட்டு துறைமுகங்கள், கப்பற்றுறை மற்றும் விமான சேவைகள் அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.