• Increase font size
  • Default font size
  • Decrease font size

2024-04-25 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை (அடுத்த கூட்டத்தில் உறுதிப்படுத்திக் கொள்ளுவதற்கு உட்பட்டு)
2002 ஆம் ஆண்டின் 34 ஆம் இலக்க இலங்கை சிவில் விமான சேவைகள் அதிகாரசபை சட்டம் மற்றும் 2010 ஆம் ஆண்டின் 14 ஆம் இலக்க சிவில் விமான சேவைகள் சட்டம் என்பவற்றைத் திருத்துதல்
- விமான சேவைகள் தொழிற்துறையின் செயற்படுத்தல், எல்லைகள் மற்றும் வரையறைகள் நாளுக்கு நாள் விரிவடைந்து வருகின்றமையினால் நாட்டின் சிவில் விமான சேவைகள் கொள்கைக்கும், தொழில்துறையின் தேவைகளுக்கும் சிவில் விமான சேவைகளின் உலகளாவிய போக்கிற்கும் ஏற்ற விதத்தில் 2002 ஆம் ஆண்டின் 34 ஆம் இலக்க இலங்கை சிவில் விமான சேவைகள் அதிகாரசபை சட்டத்தையும் 2010 ஆம் ஆண்டின் 14 ஆம் இலக்க சிவில் விமான சேவைகள் சட்டத்தையும் திருத்தும் தேவை இனங்காணப்பட்டுள்ளது. அதற்கிணங்க, இது சம்பந்தமான சிபாரிசுகளை பெற்றுக்கொள்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள குழுவின் சிபாரிசுகளை அடிப்படையாகக்கொண்டு குறித்த சட்டங்களை திருத்துவதற்கான சட்டமூலங்களை வரையுமாறு சட்டவரைநருக்கு ஆலோசனை வழங்கும் பொருட்டு துறைமுகங்கள், கப்பற்றுறை மற்றும் விமான சேவைகள் அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.