• Increase font size
  • Default font size
  • Decrease font size

2024-04-25 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை (அடுத்த கூட்டத்தில் உறுதிப்படுத்திக் கொள்ளுவதற்கு உட்பட்டு)
ஹோமாகம, பிட்டிபனவில் அமைந்துள்ள இரண்டு காணித் துண்டுகளை வரையறுக்கப்பட்ட தேசிய வர்த்தக முகாமைத்துவ கல்லூரிக்கு (NSBM) வழங்குதல்
- ஹோமாகம நகர அபிவிருத்தி திட்டத்தின் கீழ் "அறிவினை மையப்படுத்திய நகரம்" என்னும் எண்ணக்கருவுக்கு அமைவாக விஞ்ஞான மற்றும் தொழிநுட்ப துறைகளை விருத்தி செய்வதை முன்னுரிமையாகக் கொண்டு அவற்றுக்குத் தேவையான காணித் துண்டுகளை ஒதுக்கும் நோக்கில் ஹோமாகம, பிட்டிபனவில் அமைந்துள்ள மாஹேனவத்த என்னும் 237 ஏக்கர் விஸ்தீரணமுடைய காணி நகர அபிவிருத்தி அதிகாரசபையினால் சுவீகரிக்கப்பட்டுள்ளது. இந்த காணியிலிருந்து ஏக்கர் 14 றூட் 03 பேர்ச்சஸ் 12.8 விஸ்தீரணமுடைய காணித் துண்டொன்றை வரையறுக் கப்பட்ட தேசிய வர்த்தக முகாமைத்துவ கல்லூரியின் II ஆம் கட்ட நிர்மாணிப்புக்காகவும் மேலும் சுமார் 20 ஏக்கர் விஸ்தீரணமுடைய காணி துண்டொன்றை அதன் III ஆம் கட்ட நிர்மாணிப்புக்காகவும் அரசாங்க மதிப்பீட்டாளரின் மதிப்பீட்டு பெறுமதியினை அறவிடுவதற்கு உட்பட்டு, நீண்டகால குத்தகை அடிப்படையில் வரையறுக்கப்பட்ட தேசிய வர்த்தக முகாமைத்துவ கல்லூரிக்கு வழங்குவதற்காக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.