• Increase font size
  • Default font size
  • Decrease font size

2024-04-25 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை (அடுத்த கூட்டத்தில் உறுதிப்படுத்திக் கொள்ளுவதற்கு உட்பட்டு)
Wetland Link International - Asia Oceania (WLI-ASIA OCEANIA) என்பதன் முதலாவது மாநாட்டை கொழும்பு தியசரு பூங்காவில் நடாத்துதல்
- Wetland Link International என்பது ஈரநில கல்வி நிலையங்களுக்கான சர்வதேச உதவி வலையமைப்பாகும் என்பதோடு, இதில் ஐக்கிய இராச்சியத்தின் Wildfowl and Wetlands Trust நிறுவனமானது தலைமை தாங்குகின்றது. WLI ஒன்றியமானது 06 கண்டங்கள் முழுவதும் பரந்து 350 ஈரநில கல்வி நிலையங்களை கொண்டுள்ளது. ஆசியாவில் ஈரநிலங்களை விருத்தி செய்யும் பொருட்டு WLI இன் துணை நிறுவனமாக WLI-Asia (Wetland Link International - Asia) தாபிக்கப்பட்டுள்ளதோடு, இது 100 ஈரநில கல்வி நிலையங்களை கொண்டுள்ளது. இதற்கு மேலதிகமாக 2022 ஆம் ஆண்டில் WLI-Asia ஒன்றியத்தினால் அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஈரநில கல்வி நிலையங்களுகளுடன் இணைந்து WLI-ASIA OCEANIA என்னும் ஒன்றியத்தை தாபித்துக்கொண்டுள்ளது. WLI-ASIA OCEANIA என்பதன் முதலாவது மாநாட்டை இலங்கை காணி அபிவிருத்தி கூட்டுத்தாபனத்தினால் நிருவகிக்கப்படும் தியசரு பூங்காவில் 2024 யூன் மாதம் 16 ஆம் திகதியிலிருந்து 22 ஆம் திகதிவரை கூட்டங்கள், ஊக்குவிப்புகள், மாநாடுகள் மற்றும் கண்காட்சிகள் (MICE) போன்றவற்றுடன் சுற்றுலா மேம்பாட்டு நிகழ்ச்சித்திட்டமொன்றாக கொழும்பில் நடாத்துவதற்கு பிரேரிக்கப்பட்டுள்ளது. அதற்கிணங்க 100 வௌிநாட்டு தூதுக் குழுக்களினதும் 75 உள்நாட்டு குழுக்களினதும் பங்குபற்றுதலுடன் குறித்த மாநாட்டை கொழும்பில் நடாத்துவதற்கும் அதற்கு அனுசரணை வழங்குவதற்குமாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.