• Increase font size
  • Default font size
  • Decrease font size

2024-04-25 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை (அடுத்த கூட்டத்தில் உறுதிப்படுத்திக் கொள்ளுவதற்கு உட்பட்டு)
நீர்கொழும்பு ஏத்துகால கரையோர பூங்காவை அபிவிருத்தி செய்யும் பொருட்டு குறித்த பூங்கா அமைந்துள்ள காணியை நகர அபிவிருத்தி அதிகாரசபைக்கு உடைமையாக்கிக்கொள்தல்
- ஏக்கர் 06 றூட் 01 பேர்ச்சஸ் 9.1 விஸ்தீரணமுடைய ஏத்துகால கரையோர பூங்கா (Browns Beach) பொது மக்களுக்காக நீர்கொழும்பு மாநகரசபை எல்லைக்குள் காணப்படும் ஒரே கரையோர பூங்காவாகும் என்பதோடு, இது 2021 - 2030 நீர்கொழும்பு அபிவிருத்தி திட்டத்தில் அடர்த்திக்கூடிய சுற்றலா மேம்பாட்டு வலயத்தினுள் அமைந்துள்ளது. இந்த கரையோர பூங்கா உள்நாட்டு மற்றும் வௌிநாட்டு சுற்றுலா பயணிகளை கவரும் பூங்காவொன்றாக மாற்றியமைக்கும் பொருட்டு அதன் முகாமைத்துவத்தை நகர அபிவிருத்தி அதிகாரசபைக்கு கையளிப்பதற்கு நீர்கொழும்பு மாநகரசபையினால் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதற்கிணங்க உரிய அபிவிருத்தி திட்டங்களுக்கு அமைவாக சுற்றுலா வலையமொன்றாக அபிவிருத்தி செய்யும் பொருட்டு குறித்த இந்த பூங்கா அமைந்துள்ள காணியை அரசாங்க காணி கட்டளைச் சட்டத்திலுள்ள ஏற்பாடுகளின் பிரகாரம் இறையிலி கொடையொன்றாக நகர அபிவிருத்தி அதிகாரசபைக்கு உடைமையாக்கிக்கொள்ளும் பொருட்டு நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.