• Increase font size
  • Default font size
  • Decrease font size

2024-04-25 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை (அடுத்த கூட்டத்தில் உறுதிப்படுத்திக் கொள்ளுவதற்கு உட்பட்டு)
பாடசாலை மாணவர்கள் சார்பில் நாடளாவிய ரீதியில் நடைமுறைப்படுத்தப்படும் விழிப்புணர்ச்சி நிகழ்ச்சித்திட்டத்தை விரிவுபடுத்துதல்
- பாடசாலை மாணவர்களின் மனதில் அடிக்கடி உருவாகும் மனக்குழப்ப நிலை மற்றும் மன அழுத்தம் போன்றவற்றை தவிர்த்து அமைதி தன்மையை ஏற்படுத்தும் நோக்கில் "பாடசாலை மாணவர்கள் சார்பில் விழிப்புணர்ச்சி நிகழ்ச்சித்திட்டத்தை" நடைமுறைப்படுத்துவதற்கு 2022‑12‑12 ஆம் திகதியன்று நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதற்கிணங்க தற்போது ஒரு வருட காலத்திற்கு மேலாக நாட்டிலுள்ள அனைத்து பாடசாலைகளிலும் இந்த நிகழ்ச்சித்திட்டமானது நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. இந்த நிகழ்ச்சித்திட்டத்தின் மற்றுமொரு கட்டமாக வருடாந்தம் வெசாக் நோன்மதி தினத்திற்கு பின்னய திகதியை தேசிய விழிப்புணர்ச்சி தினமாக கொண்டாடுவதற்கும் வெசாக் வாரத்திற்கு ஒருங்கிணைவாக "வெசாக் வாரத்திலிருந்து விழிப்புணர்ச்சியுடன்கூடிய தேசத்தை நோக்கி" என்னும் நிகழ்ச்சித்திட்டத்தை எதிர்வரும் காலங்களில் வருடாந்தம் நடைமுறைப்படுத்துவதற்கும் 2024 ஆம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் ஆரம்பத்தில் "சர்வதேச விழிப்புணர்ச்சி மாநாட்டினை" நடாத்துவதற்கும் கல்வி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.