• Increase font size
  • Default font size
  • Decrease font size

2024-04-08 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை (அடுத்த கூட்டத்தில் உறுதிப்படுத்திக் கொள்ளுவதற்கு உட்பட்டு)
அகில இலங்கை சாசனாரக்‌ஷக்க சபை வியட்நாம் பௌத்த சங்க சபையுடன் செய்துகொள்ளும் புரிந்துணர்வு உடன்படிக்கை
- வியட்நாமுக்கும் இலங்கைக்கும் இடையில் நிலவும் கலாசார மற்றும் மத உறவுகளை மேலும் பலப்படுத்துவதற்கு அகில இலங்கை சாசனாரக்‌ஷக்க சபைக்கும் வியட்நாம் பௌத்த சங்க சபைக்கும் இடையில் புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றை கைச்சாத்திடுவதற்கு முன்மொழியப்பட்டுள்ளது. இதன் பொருட்டிலான வரைவு புரிந்துணர்வு உடன்படிக்கைக்கு வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் உடன்பாடும் சட்டமா அதிபர் திணைக்களத்தின் உடன்பாடும் கிடைக்கப் பெற்றுள்ளன. அதற்கிணங்க, குறித்த புரிந்துணர்வு உடன்படிக்கையில் கைச்சாத்திடும் பொருட்டு புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.