• Increase font size
  • Default font size
  • Decrease font size

2024-04-08 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை (அடுத்த கூட்டத்தில் உறுதிப்படுத்திக் கொள்ளுவதற்கு உட்பட்டு)
தெரிவுசெய்யப்பட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்கள் சார்பில் தெரிநிலையான விலைகளை அறிமுகப்படுத்துதல்
- தற்போது இலங்கை ரூபாவின் பெறுமதியானது ஐக்கிய அமெரிக்க டொலர் உட்பட ஏனைய வௌிநாட்டு நாணயங்களுக்கு எதிராக அதிகரித்து வருகின்ற போதிலும் அத்தியாவசிய இறக்குமதி உணவுப் பொருட்களின் சில்லறை விலை குறைவடையாமை இனங்காணப்பட்டுள்ளது. அதேபோன்று அத்தியாவசிய உணவுப் பொருட்களின் தரையிறக்கும் விலைக்கும் சில்லறை விலைக்கும் இடையில் கணிசமான வித்தியாசம் நிலவுகின்றது. இந்த நிலைமையின கீழ் வர்த்தக, வாணிப மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சின் வழிநடத்தலின் கீழ் நுகர்வோர் அலுவலகள் பற்றிய அதிகாரசபையினால் தெரிவுசெய்யப்பட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்களின் மதிப்பிடப்பட்ட சந்தை விலைகளை ஆராய்ந்து, குறித்த விலைகளை தெரிநிலையான விலைகளாக வாராந்தம் வௌிப்படுத்தும் வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் குறித்த அத்தியாவசிய உணவுப் பொருட்களின் சந்தை விலை தொடர்பில் கவனம் செலுத்தி குறித்த உணவுப் பொருட்களை கொள்வனவு செய்வதற்கு நுகர்வோருக்கு வாய்ப்பு கிடைக்கும். இவ்வாறு தெரிவுசெய்யப்பட்ட 09 அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்குரிய தெரிநிலையான விலைகள் தொடர்பில் வர்த்தக, வாணிப மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.