• Increase font size
  • Default font size
  • Decrease font size

2024-04-08 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை (அடுத்த கூட்டத்தில் உறுதிப்படுத்திக் கொள்ளுவதற்கு உட்பட்டு)
இலங்கை மின்சார சட்டமூலம்
- இலங்கை மின்சார சட்டமூலத்தை அரசாங்க வர்ததமானியில் பிரசுரித்து அங்கீகாரத்தின் பொருட்டு பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்காக 2023‑11‑20 ஆம் திகதியன்று நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதற்கிணங்க, குறித்த சட்டமூலம் வௌிப்படுத்தப்பட்டதன் பின்னர் பொதுமக்கள் அடங்கலாக பல்வேறுபட்ட தரப்பினர்களிடமிருந்து இது தொடர்பில் கருத்துக்களும் பிரேரிப்புகளும் கிடைக்கப் பெற்றுள்ளதோடு, இந்த கருத்துக்களையும் பிரேரிப்புகளையும் மீளாய்வு செய்து பொருத்தமான ஏற்பாடுகளை குறித்த இந்த சட்டமூலத்தில் சேர்ப்பதற்கும் மின்சார துறை மறுசீரமைப்பு தொடர்பில் அரசாங்கத்தின் கொள்கையினை மிக தௌிவாக எடுத்துக் காட்டுவதற்கும் இயலுமாகும் வகையில் மேலும் செய்யவேண்டிய திருத்தங்கள் இனங்காணப் பட்டுள்ளன. இவ்வாறு இனங்காணப்பட்ட திருத்தங்களையும் உள்ளடக்கி சட்டவரைநரினால் மீண்டும் தயாரிக்கப்பட்டுள்ள மின்சார சட்டமூலத்திற்கு சட்டமா அதிபரின் உடன்பாடு கிடைக்கப்பெற்றுள்ளது. அதற்கிணங்க, இந்த சட்டமூலத்தை அரசாங்க வர்த்தமானியில் பிரசுரிப்பதற்கும் அதன் பின்னர் அங்கீகாரத்தின் பொருட்டு பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்குமாக மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.