• Increase font size
  • Default font size
  • Decrease font size

2024-04-08 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை (அடுத்த கூட்டத்தில் உறுதிப்படுத்திக் கொள்ளுவதற்கு உட்பட்டு)
கொரிய குடியரசின் கொரிய சர்வதேச ஒத்துழைப்பு முகவராண்மையின் உதவியின் கீழ் தொழிநுட்பவியல் கல்லூரிகள் மற்றும் தொழிநுட்ப கல்லூரிகள் என்பவற்றில் தானியங்கி மோட்டார் வாகன வேலைத் தளங்களை நவீனமயப்படுத்தல்
- தொழிநுட்ப கல்வி மற்றும் பயிற்சித் திணைக்களத்தின் கீழ் நிலவும் மருதானை, கண்டி, பண்டாரவளை, கேகாலை மற்றும் சம்பாந்துறை ஆகிய தொழிநுட்பக் கல்லூரிகளில் மோட்டார் வாகன தொழிநுட்ப பாடநெறிகளை விருத்தி செய்யும் பொருட்டு ஐந்து மோட்டார் வாகன வேலைத்தளங்களை விருத்தி செய்வதற்காக 2013-2015 காலப்பகுதியில் கொரிய சர்வதேச ஒத்துழைப்பு முகவராண்மையினால் நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது. இந்த வேலைத்தளங்கள் ஏற்கனவே பத்து (10) வருட காலம் பயன்படுத்தப்பட்டுள்ளமையினால் அவற்றிலுள்ள உபகரணங்களைத் திருத்தவும், இற்றைப்படுத்தவும் புதிதாக பெற்றுக் கொள்வும் வேண்டியுள்ளது. இந்த நோக்கங்ளுக்காக 75,500 ஐக்கிய அமெரிக்க டொர்களைக் கொண்ட நிதி உதவிகளை வழங்குவதற்கு கொரிய சர்வதேச ஒத்துழைப்பு முகவராண்மை உடன்பாடு தெரிவித்துள்ளது. அதன் சார்பில் இரு தரப்பினர்களுக்குமிடையில் கைச்சாத்திடுவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ள கலந்துரையாடல் குறிப்பில் கைச்சாத்திடும் பொருட்டு கல்வி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.