• Increase font size
  • Default font size
  • Decrease font size

2024-04-08 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை (அடுத்த கூட்டத்தில் உறுதிப்படுத்திக் கொள்ளுவதற்கு உட்பட்டு)
தேர்தல்களுக்கான வைப்பு பணத் தொகைகளை திருத்துதல்
- சனாதிபதி தேர்தல் சட்டத்திலும் பாராளுமன்ற தேர்தல் சட்டத்திலும் மாகாண சபை தேர்தல் சட்டத்திலும் உள்ள ஏற்பாடுகளின் பிரகாம் நடைமுறையிலுள்ள வைப்பு பணத் தொகை எல்லைகளை காலத்திற்கு ஏற்றவாறு சமூக, பொருளாதார மற்றும் அரசியல் பின்னணிக்கு அமைவாக இற்றைப்படுத்துவது பொருத்தமானதென இனங்காணப்பட்டுள்ளது. அதற்கிணங்க, பின்வருமாறு உரிய வைப்பு பணத்தொகையை திருத்தும் பொருட்டு சட்டமூலமொன்றை வரையுமாறு சட்டவரைநருக்கு ஆலோசனை வழங்குவதற்காக மாண்புமிகு சனாதிபதி அவர்களினாலும் நீதி, சிறைச்சாலை அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சரினாலும் சமர்ப்பிக்கப்பட்ட கூட்டு பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.

* 1981 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க சனாதிபதி தேர்தல் சட்டத்திற்கு அமைவாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியொன்றின் மூலம் போட்டியிடும் அபேட்சகர் ஒருவரின் வைப்பு பணத்தொகையை 2.6 மில்லியன் ரூபா வரையும் சுயாதீன அபேட்சகர் ஒருவரின் வைப்பு பணத்தொகையை 3.6 மில்லியன் ரூபா வரையும் அதிகரித்தல்.

* 1981 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க பாராளுமன்ற தேர்தல் சட்டத்திற்கு அமைவாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியொன்றின் மூலம் போட்டியிடும் அபேட்சகர் ஒருவரின் வைப்பு பணத்தொகையை 11,000/- ரூபா வரையும் சுயாதீன அபேட்சகர் ஒருவரின் வைப்பு பணத்தொகையை 16,000/- ரூபா வரையும் அதிகரித்தல்.

* 1988 ஆம் ஆண்டின் 2 ஆம் இலக்க மாகாண சபைகள் தேர்தல் சட்டத்திற்கு அமைவாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியொன்றின் மூலம் போட்டியிடும் அபேட்சகர் ஒருவரின் வைப்பு பணத்தொகையை 6,000/- ரூபா வரையும் சுயாதீன அபேட்சகர் ஒருவரின் வைப்பு பணத்தொகையை 11,000/- ரூபா வரையும் அதிகரித்தல்.