• Increase font size
  • Default font size
  • Decrease font size

2024-04-08 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை (அடுத்த கூட்டத்தில் உறுதிப்படுத்திக் கொள்ளுவதற்கு உட்பட்டு)
மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த இரண்டாம் நிலை தொழில் முயற்சியொன்றாக பெயரிடல்
- பின்வரும் கம்பனிகளை மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த இரண்டாம் நிலை தொழில் முயற்சிகளாக பெயர் குறிப்பிட்டு, குறித்த கம்பனிகளுக்கு கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டத்தின் (II) அட்டவணையின் கீழ் குறிப்பிடப்பட்டுள்ள சட்டங்களிலிருந்து விலக்களித்தல் அல்லது ஊக்குவித்தல்களை வழங்குவதற்கும் அதற்கான கட்டளைகளை வர்த்தமானி அறிவித்தல்களின் மூலம் வௌிப்படுத்துவதற்கும் முதலீட்டு மேம்பாட்டு அமைச்சராக மாண்புமிகு சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.

* PORT CITY BPO (PRIVATE) LIMITED கம்பனி - கடல் கடந்த பொழுதுபோக்கு துறைசார்பில் வியாபார செயன்முறைகளை வௌிவாரி தோற்றுவாய்களுக்கு வழங்கும் சேவைகளை பெற்றுக் கொடுக்கும் தொழில்முயற்சியொன்றை நடாத்திச் செல்வதன் சார்பில்.

* IVIVA PTE LTD கம்பனி - குறைந்த காபன் பொருளாதாரத்திற்கு மாற்றம் அடைவதற்கு உலகளாவிய சேவை பெறுநர்களின் பல்வேறுபட்ட பணிகளுக்கு ஒத்தாசை நல்கும் பொருட்டு திறன் நகர தகவல் தொழிநுட்பத்தின் மூலம் வலுவூட்டப்பட்ட உற்பத்திகள் மற்றும் தீர்வுகளை உருவாக்கும் தகவல் தொழிநுட்ப சேவைகளை வழங்கும் தொழில்முயற்சியொன்றை நடாத்திச் செல்வதன் சார்பில்.

* ECHELON TRADE (PVT) LIMITED கம்பனி - பல்நோக்கு உலக சந்தைகளின் ஊடாக துணிகள், ஆடைகள், ஆடம்பர கைக்கடிகாரங்கள், தங்கம் மற்றும் இரத்தினக்கல், மின்சார உபகரணங்கள் மற்றும் அழகுசாதனப் பொருள் வர்த்தக தொழில்முயற்சியொன்றை நடாத்திச் செல்வதன் சார்பில்.

* 99X TECHNOLOGY AS கம்பனி - உற்பத்தி பொறியியல் மற்றும் புத்தாக்கங்கள் அதேபோன்று இணையத்தளங்களை விருத்தி செய்தல், நடமாடும் பிரயோகங்களை விருத்தி செய்வதன் மூலம் நடைமுறை செயற்பாட்டு பிரச்சினைகளுக்கு தீர்வுகளை தயாரிப்பதற்காக உலகளாவிய சுயாதீன மென்பொருள் தொழில்முயற்சியாளர்களுக்கு சேவை வழங்கும் தொழில்முயற்சியொன்றை நடாத்திச் செல்தல்.