• Increase font size
  • Default font size
  • Decrease font size

2024-04-08 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை (அடுத்த கூட்டத்தில் உறுதிப்படுத்திக் கொள்ளுவதற்கு உட்பட்டு)
இலங்கைக்கும் சாட் குடியரசுக்கும் இடையில் இராஜதந்திர உறவுகளை ஏற்படுத்திக்கொள்ளல்
- இலங்கை ஏற்கவே ஆபிரிக்க கண்டத்தின் 46 நாடுகளுடன் இராஜதந்திர உறவுகளை ஏற்படுத்திக் கொண்டுள்ளதோடு, சாட் குடியரசும் இலங்கையுடன் இராஜதந்திர உறவுகளை ஏற்படுத்திக் கொள்வதற்கு அதன் விருப்பத்தினை வௌிப்படுத்தியுள்ளது. பல்புடை பங்குதாரர் ஒருவராக சாட் குடியரசு ஐக்கிய நாடுகள் அமைப்பிலும் ஏனைய பல்புடை மாநாடுகளிலும் இலங்கைக்கு ஒத்தாசை தெரிவித்துள்ளது. அதற்கிணங்க. சாட் குடியரசுடன் இராஜதந்திர உறவுகளை ஏற்படுத்திக் கொள்ளும் பொருட்டு வெளிநாட்டலுவல்கள் அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.