• Increase font size
  • Default font size
  • Decrease font size

2024-04-08 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை (அடுத்த கூட்டத்தில் உறுதிப்படுத்திக் கொள்ளுவதற்கு உட்பட்டு)
கமத்தொழில் நவீனமயப்படுத்தல் நிகழ்ச்சித்திட்டத்தை முன்னெடுத்துச் செல்வதற்காக இளைஞர் விவசாய ‑ தொழில்முயற்சி கிராமங்களை தாபிக்கும் கருத்திட்டம்
- கமத்தொழிலின்பால் இளைய சமூகத்தினரின் கவனத்தை ஈர்ப்பதையும் அவர்களுடைய பொருளாதார நிலைமையை விருத்தி செய்வதையும் நோக்காகக் கொண்டு இளைஞர் விவசாய முயற்சியாளர்களைக் கொண்ட சமூகமொன்றை உருவாக்குவதற்கும் கமத்தொழில் பிரதேசங்களில் கமத்தொழில் நவீனமயப்படுத்தல்களை அறிமுகப்படுத்துவதற்கும் இளைஞர் விவசாய ‑ தொழில்முயற்சி கிராமங்களை தாபிக்கும் கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. அதன் முதலாம் கட்டமாக 2024 ஆம் ஆண்டில் தெரிவு செய்யப்பட்ட சில பிரதேச செயலளார் பிரிவுகளில் கிராமம் ஒன்று வீதம் தெரிவு செய்து விவசாய தொழில்முயற்சி கிராமங்களை தாபிக்கும் கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கும் நவீன தொழினுட்பம் உட்பட, திறன் தொழினுட்பம் போன்றவற்றைப் பயன்படுத்துவதற்கு இளைய விவசாய சமூகத்தினருக்கு வசதிகளைச் செய்வதற்குமாக கமத்தொழில் மற்றும் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.