• Increase font size
  • Default font size
  • Decrease font size

2024-04-08 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை (அடுத்த கூட்டத்தில் உறுதிப்படுத்திக் கொள்ளுவதற்கு உட்பட்டு)
Sri Lanka Institute of Biotechnology (Private) Limited நிறுவனத்திற்கும் அவுஸ்திரேலியாவின் மொனாஷ் பல்கலைக்கழகத்திற்கும் இடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கை
- ஆராய்ச்சி மற்றும் புத்தாக்கம் சார்ந்த செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பினை வழங்கும் வகையில் Sri Lanka Institute of Biotechnology (Private) Limited நிறுவனத்திற்கும் அவுஸ்திரேலியாவின் மொனாஷ் பல்கலைக்கழகத்திற்கும் இடையில் புரிந்துணர்வு உடன்படிக்கையில் கைச்சாத்திடுவதற்கு முன்மொழியப்பட்டுள்ளது. ஆராய்ச்சி மற்றும் சேவையுடன் கூடிய கூட்டு பிரேரிப்புகளைத் தயாரித்தல், புத்தாக்கம், தொழினுட்ப அபிவிருத்தி, அறிவினைப் பகிர்ந்து கொள்ளல், ஆராய்ச்சி பொருட்களின் பரிமாறல், நிபுணர்கள், விஞ்ஞானிகள் மற்றும் மாணவர்களை பரிமாறிக் கொள்தல், ஒத்துழைப்பு மாநாடுகள், செயலமர்வுகள் மற்றும் ஆராய்ச்சி தொடர்புபட்ட செயற்பாடுகளை மேற்கொள்தல் போன்ற பல பணிகள் உள்ளடக்கப்பட்டுள்ள உத்தேச வரைவு புரிந்துணர்வு உடன்படிக்கைக்கு வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் உடன்பாடும் சட்டமா அதிபரின் உடன்பாடும் கிடைக்கப்பெற்றுள்ளது. அதற்கிணங்க, இரு தரப்பினர்களுக்குமிடையில் குறித்த புரிந்துணர்வு உடன்படிக்கையில் கைச்சாத்திடும் பொருட்டு கல்வி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.