• Increase font size
  • Default font size
  • Decrease font size

2024-04-08 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை (அடுத்த கூட்டத்தில் உறுதிப்படுத்திக் கொள்ளுவதற்கு உட்பட்டு)
குடிநீர் பற்றிய தேசிய கொள்கையும் நீர் பாதுகாப்பு பற்றிய தேசிய கொள்கையும்
- குடிநீர் விநியோக சேவை பிரிவில் எழுந்துள்ள போக்குகள் மற்றும் சவால்களுக்கு முகங்கொடுக்கும் பொருட்டு விரிவானதும் இற்றைப்படுத்தப்பட்டதுமான அணுகுமுறையொன்றின் தேவை இனங்காணப்பட்டுள்ளது. அதற்கிணங்க, உரிய துறைசார் நிபுணர்களினதும் தரப்பினர்களினதும் ஆலோசனைகளையும் அதேபோன்று பொதுமக்களின் கருத்துக்களையும் பெற்று சமகால மற்றும் எதிரகால தேவைகளுக்கு ஏற்ற விதத்தில் 'குடிநீர் பற்றிய தேசிய கொள்கை' மற்றும் 'நீர் பாதுகாப்பு பற்றிய தேசிய கொள்கை' என்பன தயாரிக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் பிரசைகள் அனைவரினதும் பாதுகாப்பானதும் தரம்மிக்கதுமான குடிநீருக்கான அணுகலை உறுதிப்படுத்தல், நிலைபேறுடைய நீர் பாவனையை மேம்படுத்துதல், நீர் துறையின் பொருளாதார விருத்தி மற்றும் சுபீட்சத்தை மேம்படுத்துதல் போன்ற நோக்கங்களை அடைவதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது. அதற்கிணங்க, 'குடிநீர் பற்றிய தேசிய கொள்கை' மற்றும் 'நீர் பாதுகாப்பு பற்றிய தேசிய கொள்கை' என்பவற்றை அதற்குரிய ஏனைய கொள்கைகளுடன் பொருத்தமானவாறு இணைத்து நடைமுறைப்படுத்தும் பொருட்டு நிதி, பொருளாதார நிலைப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக அதிமேதகைய சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.