• Increase font size
  • Default font size
  • Decrease font size

2024-04-08 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை (அடுத்த கூட்டத்தில் உறுதிப்படுத்திக் கொள்ளுவதற்கு உட்பட்டு)
இலங்கை கரையோர பாதுகாப்பு படைக்கு சொந்தமான கிரிந்த உயர் பயிற்சி நிறுவனத்தில் Ship in the Box கருத்திட்டமொன்றை ஆரம்பித்தல்
- 2009 ஆம் ஆண்டின் 41 ஆம் இலக்க கரையோர பாதுக்காப்பு திணைக்கள சட்டத்தின் மூலம் இலங்கை கரையோர பாதுகாப்புத் திணைக்களமானது தாபிக்கப்பட்டுள்ளதோடு, இலங்கையின் கரையோர நீர்பரப்பிலும் ஆழ் கடலிலும் பாதுகாப்பினை உறுதிப்படுத்துதல், இந்நாட்டிற்கு சட்டவிரோதமாக குடிவருதலையும் இந்நாட்டிலிருந்து சட்டவிரோதமாக குடியகல்தலையும் தடுத்தல், கடல் போக்குவரத்தின் போது பாதுகாப்பினை உறுதி செய்வதற்கு ஒத்தாசை நல்குதல், கடல்சார் சுற்றாடலை பாதுகாத்தல் மற்றும் கடல்சார் அனர்த்தங்களைத் தவிர்த்தல் உட்பட கட்டுப்படுத்தல் போன்ற பணிகளை நிறைவேற்றும் பொறுப்பு இந்த திணைக்களத்திற்கு கையளிக்கப்பட்டுள்ளது. குறித்த இந்த கடமைகளின் தொழில்சார் பண்பு மற்றும் சட்ட நிலைமை என்பன பாதுகாக்கப்படும் விதத்தில் நடவடிக்கை எடுக்கும் பொருட்டு பல்வேறுபட்ட சர்வதேச அமைப்புகளுடனும் உலகளாவிய கரையோர பாதுகாப்பு படையணிகளுடனும் இணைந்து இந்த திணைக்களமானது செயலாற்றுகின்றது. அதற்கிணங்க, இலங்கை கரையோர பாதுகாப்பு உத்தியோகத்தர்களைப் பயிற்றுவிப்பதற்கு ஐக்கிய அமெரிக்க குடியரசின் அரச ஏற்றுமதி கட்டுப்பாடு, எல்லை பாதுகாப்புத் திணைக்களத்தின் கீழ் Ship in the Box கருத்திட்டமொன்றை 355,575 ஐக்கிய அமெரிக்க டொலர்கள் கொண்ட (சகல வரிகளுடனும்) முழுமையான கொடையொன்றை வழங்குவதற்கு ஐக்கிய அமெரிக்க குடியரசு உடன்பாடு தெரிவித்துள்ளது. இந்த கருத்திட்டத்தை கிரிந்த உயர் பயிற்சி நிறுவனத்தில் தாபித்து நடைமுறைப்படுத்தும் பொருட்டு பாதுகாப்பு அமைச்சராக அதிமேதகைய சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.