• Increase font size
  • Default font size
  • Decrease font size

2024-04-08 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை (அடுத்த கூட்டத்தில் உறுதிப்படுத்திக் கொள்ளுவதற்கு உட்பட்டு)
ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் மருத்துவ பட்டப்படிப்புக்காக கொடுப்பனவு அடிப்படையில் மாணவர்களை அனுமதித்தல்
- ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகமானது 1988 ஆம் ஆண்டின் 27 ஆம் இலக்க ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல அரச பாதுகாப்பு பயிற்சி நிறுவன (திருத்த) சட்டத்தின் மூலம் பல்கலைக்கழகமொன்றாக தாபிக்கப்பட்டுள்ளது. இராணுவ சேவைகளின் தேவைக்கு அமைவாக மருத்துவ தொழில் வல்லுநர்களாக பயிலிளவல் உத்தியோகத்தர்களை பயிற்றுவித்து மருத்துவ மற்றும் சத்திரசகிச்சை மருத்துவ பட்டம் வழங்கும் பொருட்டு 2011 ஆம் ஆண்டில் இந்த பல்கலைக்கழகத்தில் மருத்துவ பீடமானது ஆரம்பிக்கப்பட்டது. அதற்கிணங்க, தற்போது உள்நாட்டு மாணவர்கள் சார்பில் முப்படை அல்லது பொலிஸ் பயிலிளவல் உத்தியோகத்தர் ஒருவராக இணைந்து கொண்டதன் பின்னர் மாத்திரமும் தகைமை பெற்ற வௌிநாட்டு மாணவர்கள் சார்பில் கொடுப்பனவு அடிப்படையில் மாத்திரமும் இந்த பல்கலைக்கழகத்தின் மருத்துவ பட்டப் படிப்பிற்கான வாய்ப்பினை பெற்றுக்கொள்ள முடியும். இந்த வாய்ப்பினை மேலும் விரிவுபடுத்தி 2024 ஆம் கல்வி ஆண்டிலிருந்து தகைமைகளைப் பெற்றுள்ள உள்நாட்டு அபேட்சகர்களையும் கொடுப்பனவு அடிப்படையில் மருத்துவ பட்டபாடநெறி சார்பில் ஆட்சேர்ப்பு செய்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கிணங்க, இலங்கையில் ஏனைய தேசிய பல்கலைக்கழகங்களில் மாணவர்களை உள்வாங்குவதற்காக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் பின்பற்றப்படும் Z பெறுமதிக்கு மேலதிகமாக சில தகைமைகளுடன் தயாரிக்கப்பட்டுள்ள தகவுத்திறன்களைப் பின்பற்றி கொடுப்பனவு அடிப்படையில் மருத்துவ மற்றும் சத்திரசிகிச்சை மருத்து பட்டப்படிப்பினைக் கற்பதற்கு ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்தில் பட்ட அபேட்சகர்களாக உள்வாங்கும் பொருட்டு பாதுகாப்பு அமைச்சராக அதிமேதகைய சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.