• Increase font size
  • Default font size
  • Decrease font size

2024-04-01 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை (அடுத்த கூட்டத்தில் உறுதிப்படுத்திக் கொள்ளுவதற்கு உட்பட்டு)
சுற்றுலாத்துறையில் துரித அபிவிருத்தியினை ஏற்படுத்துவதற்கு அத்தியாவசியமான போக்குவரத்து வசதிகளைச் செய்தல்
- சுற்றுலா பயணிகளின் போக்குவரத்திற்காக பயன்படுத்தப்படும் வாகனங்களின் பாவனை காலமானது 06 வருடங்களை விஞ்சாமலிருப்பது பொதுவாக சுற்றுலாத்துறையில் ஏற்றுக்கொள்ளப்பட்ட முறையாக கருதப்பட்டாலும் வாகனங்கள் மற்றும் அத்தியாவசி உதிரிப்பாகங்களின் இறக்குமதி மட்டுப்படுத்தப்பட்டதன் காரணமாக சுற்றுலாத்துறையில் போக்குவரத்து நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படும் வாகனங்களின் நிலைமை திருப்திகரமானதாகவும் போதுமானதாகவும் இல்லையெனவும் காலம் கடந்த வாகனங்களை பயன்படுத்துவதன் காரணமாக பிரதான சுற்றுலா தளமாக இலங்கை ஈட்டியுள்ள நற்பெயருக்கு பாதிப்பு ஏற்படுமெனவும் தெரியவந்துள்ளது. ஆதலால், இலங்கையின் பொருளாதர புத்துயிரளிப்பு செயற்பாட்டில் சுற்றுலாத்துறையின் பங்களிப்பினை கவனத்திற்கு எடுத்துக்கொண்டு இந்த துறையின் மேம்பாட்டிற்கு அத்தியாவசியமான வாகனங்களை இறக்குமதி செய்யும் தேவை இனங்காணப்பட்டுள்ளது. அதற்கிணங்க விசேட வரிச் சலுகையினை வழங்காமல் முக்கியமாக சுற்றுலா பயணிகளின் போக்குவரத்திற்காக பயன்படுத்தும் பொருட்டு 6 - 15 ஆசணங்களைக் கொண்ட 750 வேன்கள் (மின்சாரம் மற்றும் கலப்பு வாகனங்கள் அடங்கலாக), 16 - 30 ஆசணங்களைக் கொண்ட 750 சிறிய பேருந்துகள் மற்றும் 30 - 45 ஆசணங்களைக் கொண்ட 250 பேருந்துகள் என்பவற்றை இறக்குமதி செய்யும் பொருட்டு சுற்றுலாத்துறை மற்றும் காணி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.