• Increase font size
  • Default font size
  • Decrease font size

2024-04-01 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை (அடுத்த கூட்டத்தில் உறுதிப்படுத்திக் கொள்ளுவதற்கு உட்பட்டு)
நிர்மாணித்தல், உரிமை வழங்கல் மற்றும் நடைமுறைப்படுத்தல் என்னும் அடிப்படையில் இலங்கையில் Cyclotron அடிப்படையிலான கதிர் இயக்க மருந்து பொருட்கள் உற்பத்திக்கான வசதிகளை ஏற்பாடு செய்தல்
- உள்நாட்டு வங்கிகளினால் வழங்கப்படும் கடன் மற்றும் உதவியுடன் Cyclotron அடிப்படையிலான கதிர் இயக்க மருந்து பொருட்கள் உற்பத்திக்கான வசதிகளை இலங்கையில் நடைமுறைப்படுத்துவதற்கு 2021‑03‑29 ஆம் திகதியன்று நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதற்கிணங்க, நிர்மாணித்தல், உரிமை வழங்கல் மற்றும் நடைமுறைப்படுத்தல் என்னும் அடிப்படையில் இந்த கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்தும் பொருட்டு ஆர்வ வௌிப்படுத்தல் கோரப்பட்டுள்ளதோடு, இதன் சார்பில் 05 பிரேரிப்புகள் கிடைக்கப்பெற்றுள்ளன. தொழிநுட்ப மதிப்பீட்டு குழுவினதும் அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட இணக்கப்பேச்சுக் குழுவினதும் சிபாரிசுகளின் மீது சகல தொழிநுட்ப தேவைகளை பூர்த்திசெய்துள்ள பிரேரிப்பினை முன்வைத்த M/s Access International (Pvt) Ltd. நிறுவனத்திற்கு உரிய ஒப்பந்தத்தை வழங்கும் பொருட்டு மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.