• Increase font size
  • Default font size
  • Decrease font size

2024-04-01 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை (அடுத்த கூட்டத்தில் உறுதிப்படுத்திக் கொள்ளுவதற்கு உட்பட்டு)
பண்டாரநாயக்க சர்வதேச விமானநிலைய அபிவிருத்தி கருத்திட்டத்தின் கட்டம் II படிநிலை 2 இன் கீழ் பிரதான முனைய கட்டிடம், பயணிகள் பால இலக்கம் 02 மற்றும் பயணிகள் பால இலக்கம் 03 உள்ளடக்கப்பட்ட கருத்திட்டத்தில் இனங்காணப்பட்ட பணிகள்
- 2023‑10‑30 ஆம் திகதியன்று எடுக்கப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்திற்கு அமைவாக நிர்மாண, கைத்தொழில் அபிவிருத்தி அதிகாரசபையில் பதிவுசெய்யப்பட்ட ஒப்பந்ததாரர்களிடமிருந்து மேற்போந்த நிர்மாணிப்புகள் சார்பில் தேசிய ரீதியில் போட்டிகரமான கேள்வி கோரும் வழிமுறையின் கீழ் விலைமனுக்கள் கோரப்பட்டுள்ளதோடு, இதன் பொருட்டு 04 விலைமனுக்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. தொழிநுட்ப மதிப்பீட்டு குழுவினதும் அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவினதும் சிபாரிசுகளின் மீது ஆகக்குறைந்த அனுசரணையான மதிப்பீட்டு விலையை முன்வைத்துள்ள Access Engineering PLC நிறுவனத்திற்கு உரிய பணிகளுக்கான ஒப்பந்தத்தை வழங்கும் பொருட்டு துறைமுகங்கள், கப்பற்றுறை மற்றும் விமான சேவைகள் அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.