• Increase font size
  • Default font size
  • Decrease font size

2024-04-01 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை (அடுத்த கூட்டத்தில் உறுதிப்படுத்திக் கொள்ளுவதற்கு உட்பட்டு)
SriLankan Airlines Ltd. கம்பனி சார்பில் குத்தகை அடிப்படையில் நான்கு (04) Wide - body விமானங்களை பெற்றுக் கொள்ளும் ஒப்பந்தத்தை வழங்குதல்
- SriLankan Airlines Ltd. கம்பனி சார்பில் ஐந்து (05) Wide-body விமானங்களின் தேவை இருந்த போதிலும் இரண்டு (02) விமானங்களை குத்தகை அடிப்படையில் பெற்றுக்கொள்ளும் ஒப்பந்தத்தை வழங்குவதற்கு 2024‑03‑18 ஆம் திகதியன்று நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. தொழிநுட்ப மதிப்பீட்டு குழுவினதும் அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவினதும் சிபாரிசுகளை அடிப்படையாகக் கொண்டு, மேலதிகமாக விமானமொன்றுடன் பின்வருமாறு நான்கு (04) Wide-body விமானங்களை குத்தகை அடிப்படையில் பெற்றுக் கொள்வதற்கான ஒப்பந்தத்தை வழங்கும் பொருட்டு துறைமுகங்கள், கப்பற்றுறை மற்றும் விமான சேவைகள் அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.

* Orix Aviation நிறுவனத்திடமிருந்து 06 வருட காலப்பகுதிக்கு மாதாந்தம் 360,000 ஐக்கிய அமெரிக்க டொலர்கள் கொண்ட குத்தகை கூலியின் மீது 02 விமானங்களை பெற்றுக்கொள்வதற்கான ஒப்பந்தம்.

* Aergo Capital LIMITED நிறுவனத்திடமிருந்து 08 வருட காலப்பகுதிக்கு மாதாந்தம் 365,000 ஐக்கிய அமெரிக்க டொலர்கள் கொண்ட குத்தகை கூலியின் மீது 02 விமானங்களை பெற்றுக்கொள்வதற்கான ஒப்பந்தம்.