• Increase font size
  • Default font size
  • Decrease font size

2024-04-01 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை (அடுத்த கூட்டத்தில் உறுதிப்படுத்திக் கொள்ளுவதற்கு உட்பட்டு)
வர்த்தமானியில் வௌியிடப்பட்ட கட்டளைகளை அங்கீகாரத்தின் பொருட்டு பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தல்
- 2007 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க விசேட வியாபார பண்டங்கள் அறவீட்டுச் சட்டத்தின் கீழ் தெரிவு செய்யப்பட்ட சில பொருள் வகைகளை இறக்குமதி செய்யும் போது விதிக்கப்படும் விசேட வியாபார பண்டங்கள் வரி திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதற்காக வர்த்தமானியில் வௌியிடப்பட்ட கட்டளைகள் சார்பில் குறித்த சட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள காலப்பகுதிக்குள் அவற்றுக்கு பாராளுமன்ற அங்கீகாரம் பெற்றுக் கொள்வது அத்தியாவசியமானதாகும். அதற்கிணங்க, 2007 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க விசேட வியாபார பண்டங்கள் அறவீட்டுச் சட்டத்தின் கீழ் பின்வரும் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல்களின் மூலம் வௌியிடப்பட்டுள்ள கட்டளைகளை அங்கீகாரத்தின் பொருட்டு பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்காக நிதி, பொருளாதார நிலைப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக மாண்புமிகு சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.

* 2023‑11‑30 ஆம் திகதியிடப்பட்டதும் 2360/52 ஆம் இலக்கத்தைக் கொண்ட துமான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல்.

* 2024‑01‑02 ஆம் திகதியிடப்பட்டதும் 2365/04 ஆம் இலக்கத்தைக் கொண்டதுமான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல்.

* 2024‑01‑07 ஆம் திகதியிடப்பட்டதும் 2365/84 ஆம் இலக்கத்தைக் கொண்டதுமான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல்.

* 2024‑02‑19 ஆம் திகதியிடப்பட்டதும் 2372/06 ஆம் இலக்கத்தைக் கொண்டதுமான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல்.

* 2024‑03‑01 ஆம் திகதியிடப்பட்டதும் 2373/42 ஆம் இலக்கத்தைக் கொண்டதுமான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல்.